உரிமை மாற்றத்தைப் பதிவு செய்து கொள்ளல்
உரிமை மாற்றத்தைப் பதிவு செய்து கொள்ளல்
உரிமை மாற்றத்தைப் பதிவு செய்தலுக்காக சாதாரண சேவை, மற்றும் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்படும் அதே தினத்தில் உரிமை மாற்றப் பதிவை மேற்கொள்ளும் ஒருநாள் சேவை போன்ற வசதிகள் வழங்கப்படுகின்றன. உரிமை மாற்றத்தில் பின்பற்றப்பட வேண்டிய செயன்முறைகள்
- புதிய சொந்தக்காரர் . MTA-6. பிரதி, MTA-8 பிரதி என்பவற்றையும் உரிய மாற்றத்திற்கு தேவையான ஆவணங்களையும் மோட்டார் வாகனத் திணைக்களத்தின் மாற்றப் பிரிவில் கையளித்து CMT 52 பற்றுச்சீ்ட்டைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
- கொழும்பு 05 நாரகன்பிட்டியில் உள்ள மோட்டார் வாகன தலைமைச் செயலகத்தில் அல்லது மாவட்ட மோட்டார் வாகன பரிசோதிப்பாளர் அலுவலகத்தில் அல்லது உரிய பிராந்திய அலுவலகத்தில் வேலைநாட்களில் காலை 9.00 - பி.ப 3.00 வரை உரிய வாகன வகைப் பிரிவில் கையளிக்கப்பட வேண்டும்.
உரிமை மாற்ற சேவைகள்
- ஒருநாள் சேவை
- சாதாரண சேவைகள்
ஒருநாள் சேவைகள்
- உரிமை மாற்றத்தைப் பதிவு செய்தல்
- பதிவுச் சான்றிதழில் முழு உரிமைப் பதிவு
- பதிவுச் சான்றிதழில் முழு உரிமைப் பதிவை நீக்கல்
சாதாரண சேவைகள்
- உரிமை மாற்றப் பதிவு
- பதிவுச் சான்றிதழிலில் முழு உரிமையைப் பதிதல்
- பதிவுச் சான்றிதழில் இருந்து முழு உரிமையை நீக்கல்
- பதிவுச் சான்றிதழின் மறுசீரமைப்பு
- பதிவுச் சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ள விசேட நிபந்தனைகளை அகற்றுதல்
- பதிவுச் சான்றிதழ், ஒட்டிகள், எண் தகட்டுப் பிரதிகள் விநியோகித்தல்
- உரிமையாளர் இறக்கும் பட்சத்தில் உரிமை மாற்றத்தைப் பதிவு செய்தல்
- நாட்டில் இருந்து எடுத்துச் செல்லப்படுவதற்கு அனுமதி வழங்குதல்
- பதிவை இரத்துச் செய்தல்
உரிமைச் சாதாரண பதிவு மாற்றத்திற்கு தேவையான ஆவணங்கள்
- MTA -.6 (மாற்ற அறிவிப்பு)
- MTA - 8 (விண்ணப்பம்) மாற்றம் அல்லது புதிய சொந்தக்காரர் ஒரு வரைறுக்கப்பட்ட கம்பனியாயின் ஒப்பமிடப்பட்டு முத்திரை குத்தப்பட வேண்டும். முத்திரை இல்லாதுபோயின் நிறுவனத்தின் கடிதத் தலைப்பின் மீது எழுதப்பட்ட ஒரு கடிதத்தில் முத்திரை இல்லாமை குறித்து அறிவிப்பதுடன் கம்பனியின் பதிவுச் சான்றிதழின் போட்டோப் பிரதி ஒன்றும் சமர்ப்பிக்கப்பட வேண்டும். விண்ணப்ப திகதியிலிருந்து 6 மாதங்களுக்குள் எடுக்கப்பட்ட மாற்றிப் பெறுபவரின் 2.0 X 2.5 அங்குல அளவான இரண்டு, வர்ண அல்லது கறுப்பு வெள்ளைப் புகைப்படங்கள் (உரிய பகுதியின் கிராமசேவையாளர், சமாதான நீதவான் அல்லது ஒரு பணித்தர அதிகாரி அப் புகைப்படங்களை அவற்றின் பின்பகுதியில் ஒப்பமிடுவதன் மூலம் சான்றுப்படுத்த முடியும்)
- மாற்றிப் பெறுபவரின் அடையாள அட்டை ஒரு போட்டோப் பிரதி
- மாற்றிக் கொடுக்கப்படும் உரிய ஆண்டிற்கான வருமானவரி உரிமைப் பத்திரம் மற்றும் அதனுடைய போட்டோப் பிரதி
1 .வாகனத்தின் பதிவுச் சான்றுப்பத்திரம்
2 .வாகனத்தின் அடையாள அட்டை (ஆங்கில எழுத்துக்களில் தொடங்கும் புதிய இலக்கங்களுடன் கூடிய வாகனங்களுக்கு மாத்திரம்)
- அடைமானம், முழு உரித்துடைமை அல்லது குத்தகை பதிவு செய்யப்பட்டிருக்கும் பட்சத்தில் அவற்றினை இரத்துச் செய்யும் கடிதம்
- ஆடம்பர வரிகளுக்கு பொருத்தமுடையதாக இருப்பின் அவ் வரிகள் செலுத்தியமைக்கான அசல் பற்றுச்சீட்டுக்கள் மற்றும் அவைகளின் போட்டோ பிரதிகள்
புதன்கிழமை, 05 நவம்பர் 2014 11:12 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
திங்கட்கிழமை, 16 மே 2011 09:56