விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளல் மு.ப. 8.00 - பி.ப. 3.00 வரை

  • ஒரு தூதரகத்திடம் இருந்து ஒரு சிவிலியனுக்கான மாற்றம்
  • ஒரு இராஜதந்திரி அல்லாத முக்கிய ஆளிடமிருந்து ஒரு சிவிலியனுக்கான மாற்றம்.
  • ஒரு சிவிலியனிடமிருந்து ஒரு சிவிலியனுக்கான மாற்றம். (FZ வகை)

சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்

  • உரிய முறையில் பூர்த்தி செய்யப்பட்ட M.V.C. 06 மற்றும் M.V.C. 08 படிவங்கள் (மாற்றத் திகதியிலிருந்து 6 மாதத்திற்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்.)
  • பதிவுச்சான்றிதழின் மூலப்பிரதி
  • வாகன அடையாள அட்டை (ஆங்கில எழுத்து வாகனங்களுக்கு)
  • வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சிடமிருந்து பெறப்பட்ட அதிகாரமளிக்கும் கடிதம்
  • பொது நிதி திணைக்களம் / சுங்க மதிப்பீட்டு அறிக்கை
  • மாற்றப்படும் ஆண்டுக்குரிய வருமானவரி அனுமதிப்பத்திரம் மற்றும் அதன் பிரதி (மாற்றத் திகதியிலிருந்து 6 மாதத்திற்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்)
  • மாற்றிப் பெறுபவரின் இரண்டு புகைப்படங்கள் (பிராந்திய சமாதான நீதவான் அல்லது பணிநிலைத் தர அரச ஊழியரின் உத்தியோகபூர்வ முத்திரையுடன் கூடியதான சான்றுப்படுத்தல்)
  • மாற்றிப் பெறுபவரின் தேசிய அடையாள அட்டை / கடவுச்சீட்டு / சாரதி அனுமதிப்பத்திரம் மற்றும் அவைகளின் போட்டோ கொப்பி பிரதி
  • நிதி நிறுவனங்களுக்கு ஏதாவது கடப்பாடு இருப்பின் அவைகள் மீட்கப்பட்டுவிட்டதாக நிறுவனத்தின் கடித தலைப்பிலான ஒரு கடிதம்
  • முழுமையான உரித்துடைமையின் மாற்றம் / குத்தகை முறைமையின் கீழான மாற்றம் மற்றும் ஒரு அடைமானமாக இருக்கும் பட்சத்தில் அதற்குரிய ஆவணம்

மாற்றுபவரின் பெயர்

  • அ. தூதரகங்களுக்குள்ளான உள்ளக மாற்றங்கள்
  • ஆ. ஒரு தூதரலாயத்தில் இருந்து மறு தூதரகத்திற்கான மாற்றுகை
  • இ. ஒரு தூதரலாயத்திலிருந்து வேறு ஒரு இராஜதந்திரி அல்லாத ஆளுக்கான மாற்றம் / ஒரு முக்கியமான ஆளிடமிருந்து ஒரு தூதரகத்திற்கான மாற்றம்
  • ஈ. ஒரு சிவிலியினிடம் இருந்து ஒரு தூதரகத்திற்கான மாற்றம்
  • உ. சிவிலியன்களிடமிருந்து முக்கிய ஆட்களுக்கான மாற்றம்

சாதாரண சேவையில் எடுக்கும் காலம்

சாதாரண சேவை -

  • குறைந்தது 21 நாட்கள்
  • கூடியது 30 நாட்கள்

அறவிடப்படும் கட்டணங்கள்

வாகன வகை மாற்றத்திற்கான கட்டணம் முதற் தடவையாக முழு உரித்துடைமையை பகிர்ந்து கொள்ளுதல் முதற் பதிவின் பின்னர் முழு உரித்துடைமையைப் பகிர்ந்து கொள்ளல் அடைமானத்தைப் பதிவு செய்தல் முழு உரித்துடைமை அல்லது அடைமானத்தை இரத்துச் செய்தல்
மோட்டார் கார்கள், இருநோக்கு வாகனங்கள், மோட்டார் லொறி வண்டிகள், பிறைம் மூவர்கள்  1,500 1,250 500 200 300
விவசாயமல்லாத காணி வண்டிகள், விவசாயக் காணி வண்டிகள் 500 1,250 500 200 300
முச்சக்கர வண்டிகள்,
மோட்டார் சைக்கிள்
 250 1,250 500 200 300