மோட்டார் வாகனங்களை மாற்றுவதற்கு பொருத்தமான கட்டணம்
- கட்டணங்கள்
- வரி
கட்டணங்கள்
- மாற்றுகையைப் பதிவு செய்வதற்கான கட்டணங்கள்
- எண் தகட்டுக் கட்டணங்கள் (மாகாணத்தில் ஏதாவது மாற்றங்கள் இருப்பின்)
- பார அளவீடு மற்றும் கட்டண மறுசீரமைப்புக்கள் (பொருத்தமானதாக இருப்பின் மாத்திரம்)
- அரசாங்க வாகனமாக இருப்பின் தபால் செலவினங்களும் எண் தகட்டுக் கட்டணங்களுமே அறவிடப்படுகின்றன.
- பின்வரும் நிறுவனங்களுக்கு எந்தவிதமான மாற்றல் கட்டணங்களும் அறவிடப்படமாட்டாது.
- அரசாங்க அமைச்சர்கள் திணைக்களங்கள், நியாதிக்க சபைகள்
- மாகாண சபைகள்
- உள்ளுராட்சி நிறுவனங்கள்
- இராஜதந்திர அமைப்புக்கள் பணியகங்கள்
மோட்டார் வாகனங்களின் உரிமை மாற்றம் தொடர்பானவைகளின் வரிகளும் கட்டணங்களும் செலுத்தப்பட வேண்டியனவாக உள்ளன.
வாகன வகை | உரிமை மாற்றல் கட்டணம் | முதல் தடவை அறுதி உரிமையை பதிவு செய்தல் | அடகு வைத்தலை பதிவு செய்தல் | அறுதி உரிமையைஅல்லது அடவை ரத்துச் செய்தல் |
மோட்டார் கார், இருவகைப் பயன்பாட்டு வாகனம், மோட்டார் லொரி, மோட்டார் கோச் | 2500 | 1250 | 200 | 500 |
விவசாயம் அல்லாத காணி வாகனம், பிரைம்முவர், | 1000 | 1250 | 200 | 500 |
விவசாய காணி வாகனம், முச்சக்கர வண்டி, மோட்டார் சைக்கிள் | 500 | 1250 | 200 | 500 |
- எழுதுகருவிகள் மற்றும் தபால் கட்டணமாக 50 ரூபா அறவிடப்படும்.
உரிமை மாற்றல், பதிவு செய்தல் கட்டணம் ஒரு நாள் சேவை (ரூபா)
வாகன வகை | உரிமை மாற்றல் கட்டணம் | முதல் தடவை அறுதி உரிமையை பதிவு செய்தல் | அடகு வைத்தலை பதிவு செய்தல் | அறுதி உரிமையைஅல்லது அடவை ரத்துச் செய்தல் |
---|---|---|---|---|
மோட்டார் கார், இருவகைப் பயன்பாட்டு வாகனம், மோட்டார் லொரி, மோட்டார் கோச், பிரைம்முவர் | 3750 | 2750 | 400 | 1000 |
விவசாயம் அல்லாத காணி வாகனம், டிராக்டர் டிரெய்லர் / பவுசர் | 1800 | 2750 | 400 | 1000 |
விவசாய காணி வாகனம், முச்சக்கர வண்டி, மோட்டார் சைக்கிள் | 1150 | 2750 | 400 | 1000 |
- எழுதுகருவிகள் மற்றும் தபால் கட்டணமாக 50 ரூபா அறவிடப்படும்.
If there is a change of provinces at the time of transferring charges are levied for number plates according to the class of vehicles.
வரிகள்
விற்பனை வரி
ஒரு வாகனத்தின் முதலாவது பதிவிலிருந்து 07 வருடங்களுக்கு மேற்படாத காலப்பகுதிக்கு முன்பாக வாகனத்தை மாற்றம் செய்வதாயின் அதன் முதலாவது மாற்றத்தின்பொழுது ரூபா 4000/- வரியாக அறவிடப்படுகிறது.
தடுத்து வைத்தல் வரி
ஒரு மோட்டார் காரோ அல்லது இருநோக்கு வாகனமோ அதனது முதல் பதிவிலிருந்து 05 வருடத்திற்கு விஞ்ஞாத காலப்பகுதியில் மாற்றப்படும்பொழுது ஒரு தடுத்து வைக்கும் வரியாக ரூபா 1000/- அறவிடப்படுகிறது. (இது மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கர வண்டிகள், லொறிகள், பஸ்கள் மற்றும் கை உழவியந்திரங்கள் என்பவற்றுக்குப் பொருந்தாது)
ஒரு வாகனத்தைப் பரிசோதித்து நிறை சான்றுப்பத்திரத்தைப் பெற்றுக்கொள்ளல்.(ஒரு வாகனத்தைப் பரிசோதிப்பதற்கு தொழில்நுட்பக் கிளையிலிருந்தான சிபார்சையும் மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளரிடமிருந்தான அங்கீகாரத்தையும் பெற்றுக்கொள்ள வேண்டும்.)
ஆங்கில இலக்கமுள்ள வாகனத்தின் பெற்றோல் இயந்திரத்தை டீசல் இயந்திரமாக மாற்றும்பொழுது பின்வரும் ஆவணங்கள் கொடுக்கப்பட வேண்டும். (முதலாவது பதிவிலிருந்து 03 வருடங்கள் செல்லும் வரைக்கும் எரிபொருள் மாற்றம் செய்யப்படக்கூடாது)
- பதிவுச்சான்றிதழ்
- வாகன அடையாள அட்டை
- குத்தகை வசதிகள் இருக்குமாயின் மாற்றத்திற்கு தமக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லையென உரிய நிறுவனம் குறிப்பிடும்படியான ஒரு கடிதம்
- நடப்பு வருடத்திற்கான மூல வருமானவரிப் பத்திரம்
- ஆங்கில எழுத்து இல்லாத எண்களைக் கொண்ட வாகனங்களுக்கு மேற்படி குறிப்பிட்ட ஆவணங்கள் வழங்கப்பட வேண்டும். அவைகளுக்கு வாகன அடையாள அட்டை தவிர்ந்த ஏனையவையே கொடுக்கப்பட வேண்டும். எண்தகடுகள் மற்றும் ஒட்டிகளுக்காக எந்தக் கட்டணமும் அறவிடப்படமாட்டாது
இயந்திர மாற்றீடு வகைகள் | கட்டணம் | எண்தகடு கட்டணம் | வேறு கட்டணங்கள் |
---|---|---|---|
பெற்றோலிலிருந்து டீசலிற்கு | 35,000.00 | 3,300.00 | 350.00 |
பெற்றோலிலிருந்து பெற்றோலிற்கு | 250.00 | - | 350.00 |
டீசலிலிருந்து டீசலிற்கு | 250.00 | - | 350.00 |