2009ஆம் ஆண்டு 08 ஆம் இலக்க சட்டத்தால் திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தின் 122 ஆம் பிரிவு

விபரணம் வாகன வகுப்பு செலுத்தக்கூடிய ஏனைய வகுப்பு வாகனங்கள் புகைப்படம் தற்போதைய வகுப்பு
இயந்திர இயலுமை 100CC யை விஞ்சாத பாரமற்ற மோட்டார் சைக்கிள்கள்  A1  G1    D
இயந்திர இயலுமை 100CC யை விஞ்சும் மோட்டார் சைக்கிள்கள்  A A1,G1     D
மோட்டார் முச்சக்கர வண்டிகள் அல்லது வெறும் வாகன நிறை 500 கிலோவை மற்றும் பூரண வாகன நிறை 1000 கிலோவை விஞ்சாத வான்: செல்லுபடியற்ற இழுவை வாகனங்கள் எல்லாம் இந்த வாகன வகுப்பிற்குள் உள்ளடக்கப்படும்.  B1 G1     E,F
வாகன மொத்த நிறை 3500 கிலோவை விஞ்சாததும் மற்றும் வாகன சாரதியின் ஆசனம் உட்பட 9 வாகன ஆசன இருக்கை இயலுமைகளை விஞ்சாததுமான ஆகக்கூடிய உறுதிப்படுத்தப்பட்ட 750 கிலோ வெறும் வாகன நிறையை விஞ்சாததுமான இழுவை வண்டிகளுடன் இணைக்கப்படக் கூடியதுமான இரட்டை நோக்கு மோட்டார் வாகனம், வாகன சாரதியின் இருக்கை உட்பட 9 வாகன இருக்கை இயலுமையை விஞ்சாத எல்லா செல்லுபடியற்ற காவுகை வாகனங்கள் மற்றும் எல்லாக் கார்களும் என்பன இந்த வகுப்பில் அடங்கும். G1     C,C1
பாரமற்ற மோட்டார் லொறி - மொத்த வாகன நிறை 3500 கிலோவை விஞ்சுவதும் 17000 கிலோவை விஞ்சாததுமான மோட்டார் லொறி இ்ந்த வகுப்பில் வரும். மோட்டார் வாகனங்களானவை 750 கிலோவை விஞ்சாத அதிகாரமளிக்கப்பட்ட வெறும் வாகன நிறையை உடைய ஒரு இழுவை வாகனத்துடன் இணைத்துக் கொள்ளப்படக் கூடியது. வேண்டும். இவ் வாகன வகுப்பைச் சேர்ந்த மோட்டார் வாகனங்களிலே ஒரு மோட்டார் அம்புலன்சு, மற்றும் மோட்டார் சவ வண்டி, என்பன உள்ளடங்கும். C1   B,G1   B1 
1700 கிலோவுக்கு மேற்பட்ட மொத்த நிறையை உடைய வாகனங்களின் மோட்டார் லொறி 750 கிலோவுக்கு விஞ்சாத அதிகாரமளிக்கப்பட்ட வாகன நிறையை உடைய, இழுவை வாகனத்தையும் இணைக்கப்படக்கூடியது. C1,B,J,G,G1     B
பாரமான மோட்டார் லொறி: மோட்டார் லொறியும் அதன் இழுவை வண்டிகளும் இணைந்தவை வெறும் வாகன நிறை 750 கிலோ மற்றும் மொத்த நிறை 3500 கிலோ நிறையை விஞ்சும், உயர்ந்த பட்ச அதிகாரமளிக்கப்பட்ட வாகன நிறையைக் கொண்ட  இழுவை வாகனங்களையும், இணைக்கப்பட்ட வாகனங்களும் உட்பட CE  C,C1,B,B1,G,G1,J   
பாரமற்ற மோட்டார் வண்டி - ஆட்களைக் காவுவதற்காகப் பயன்படுத்தப்படும் மோட்டார் வாகனங்களில் சாரதியின் இருக்கை உட்பட 9 க்கு குறையாததும், 33 க்கு மேற்படாததுமான இருக்கைகளைக் கொண்டுள்ள மோட்டார் வாகனங்கள்: இந்த வாகன வகுப்பைச் சேர்ந்த மோட்டார் வாகனங்கள் உயர்ந்தபட்ச அதிகாரமளிக்கப்பட்ட வெறும் வாகன நிறையாகிய 750 கிலோவை விஞ்சாதிருக்கக்கூடிய ஒரு இழுவை வாகனத்துடன் இணைக்கப்படக் கூடியது. D1   C1, B, B1, G, G1   A1 
மோட்டார் வண்டி  இதில் வாகன சாரதியின் இருக்கை உட்பட வாகன இருக்கை இயலுமை 33யை விஞ்சாதிருக்கும்: இவ் வகுப்பைச் சேர்ந்த பல மோட்டார் வாகனங்கள் உயர்ந்த பட்ச அதிகாரமளிக்கப்பட்ட வெறும் நிறையாக 750 கிலேவை விஞ்சாத இழுவை வாகனத்துடன் இணைக்கப்படக்கூடியதாக இருக்கும். D1, C, C1, B, B1, G, G1,J  
பார மோட்டார் வண்டி சாரதியின் இருக்கை உட்பட 33 இருக்கை இயலுமைகளைக் கொண்ட மோட்டார் வாகனங்களின் இணைப்பு அத்துடன் இதனுடைய இழுவை வாகனமானது உயர்ந்தபட்சம் அதிகாரமளிக்கப்பட்ட 750 கிலோவுக்கு விஞ்சாத வெறும் நிறையுடையதாகவோ அல்லது இரண்டு மோட்டார்வாகனங்களின் இணைப்பாகவோ இருக்கும். DE  D, D1, C, C1, CE, B, B1, G, G1,J  
கை உழவியந்திரங்கள் - ஒரு இழுவை வாகனத்துடன் கூடிய இரண்டு சக்கர உழவியந்திரம் G1  Nil   G1 
காணி வாகனம் - ஒரு இழுவை வாகனத்துடன் கூடியதோ அல்லது இழுவை வாகனமற்ற விவசாய காணி வாகனம்  G G1  
கட்டிட நிர்மாணம் பொதியேற்றல் பொதி இறக்கல் என்பனவற்றில் பயன்படுத்தப்படும் விசேட நோக்கங்களுக்கான வாகனங்கள் பாரஊர்தி, பாரமற்ற மோட்டார் லொறிகள், பாரமான மோட்டார் லொறிகள்  என்பன தவிர்ந்த கட்டிட நிர்மாண உபகரணங்கள் மற்றும் பொருட்களை ஏற்றும் இறக்கும் உபகரணங்களுடன் கூடியவைகள். G1