இலங்கையில் மோட்டார் வாகனங்களைப் பதிவு செய்து கொள்ளும்பொழுது, இந் நாட்டில் அதற்கு முன்பதாக பதிவு செய்யப்படாத வாகனங்களாக அவைகள் இருக்க வேண்டும்.
இடது கைப் பக்க, செலுத்தும் வாகனங்கள் இலங்கையில் பதிவு செய்யப்படுவதில்லை.
MTA - 2 இல் கொடுக்கப்பட்ட தகவல்கள்வாறாக வாகனப் பதிவில் பயன்படுத்தப்படும் விண்ணப்பஙகள் கணனி மயப்படுத்தப்படுகிறது. MTA - 2 விண்ணப்பமானது ஆங்கிலத்தில் மாத்திரம் நிரப்பப்பட வேண்டும்.
மோட்டார் வாகனங்களைப் பதிவு செய்வதற்காக சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள் மோட்டார் வாகனப் பதிவு திணைக்களத்தின் தலைமைச் செயலக உரிய பதிவுக் கிளையில் நாரகன்பிட்டி கொழும்பில் அரச வேலைநாட்களில் காலை 9.00 மணி தொடக்கம் 1.30 மணி வரை கையளிக்கப்பட வேண்டும். மோட்டார் சைக்கிளுக்கான பதிவுகள் மாத்திரம் மாவட்ட செயலகங்கள் ஊடாகச் செய்யப்படுகிறது. விண்ணப்ப படிவங்கள் கட்டணம் எதுவுமின்றி விநியோகிக்கப்படுகிறது, தலைமைச் செயலகத்திலோ அல்லது மாவட்ட செயலகங்களிலோ விண்ணப்ப படிவ கரும பீடங்களில் இருந்து விண்ணப்பபடிவங்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.
வாகனச் சொந்தக் காரரின் 2.0 x 2.5 அங்குல அளவான இரண்டு புகைப்படங்கள் (உரிய பிரதேசத்தின் கிராமசேவையாளர் அல்லது வாகன இறக்குமதியாளர் புகைப்படத்தின் பின்பக்கத்தில் சான்றுதல் செய்யவேண்டும்.)
தேசிய அடையாள அட்டை, வாகன சாரதி அனுமதிப்பத்திரம் அல்லது வாகன உரிமையாளரின் செல்லுபடியாகும் கடவுச்சீட்டு என்பனவற்றின் ஒரு போட்டோப் பிரதி
சுங்க நுழைவு (சுங்கம் 53)
சுங்கத்தீர்வைக் கொடுப்பனவுக்கான அசல் பற்றுச்சீட்டுக்கள் (மதிப்பீட்டு அறிவிப்பு)
வாகனம் புதியதாக இருப்பின் உரிய கொள்வனவுச் சிட்டை
வாகனம் மறுசீரமைக்கப்பட்டதாயின் வெளிநாட்டு பதிவுச் சான்றிதழ் (ஆங்கில மொழிபெயர்ப்புடன்)
இறக்குமதி அனுமதிப்பத்திரத்துடன் வாகனம் இறக்குமதி செய்யப்பட்டிருக்குமாயின் உரிய அனுமதிப்பத்திரம்
முழுமையான உரித்துரிமையின் பதிவுகளுக்கு உரிய MTA-3.
அடைமானமாக உள்ள ஒன்றின் பதிவு ஆயின் அடைமான உறுதியின் பிரதி
சுங்கத்தால் முப்படைகளால் அல்லது நீதிமன்றத்தால் நடாத்தப்பட்ட ஏல விற்பனையால் வாகனம் பெறப்பட்டதாக இருப்பின் உரிய அதிகாரசபையிடமிருந்து பெறப்பட்ட கடிதம் மற்றும் பற்றுச்சீட்டு
1.3.2007 க்கு பிற்பாடு வாகனம் கப்பலில் கொண்டு வரப்பட்டதாகவும் H.S. குறியீடுகள் 8702, 8703, 8704, மற்றும் 8705 என்பவற்றின் கீழ் வருவதாக இருந்தாலும் ஏற்றுமதிக்கு முந்திய பரிசோதிப்புச் சான்றிதழ்
புத்தம்புது வாகனங்களுக்கு உரிய வாகன மாதிரியின் முதல் மாதிரி அல்லது உரிய நிறை அளவிடும் சான்றிதழ்
வியாபாரப் பெயரின் கீழ் பதிவு மேற்கொள்வதாயின் வியாபாரப் பதிவுச் சான்றிதழின் ஒரு போட்டோப் பிரதி
மோட்டார் வாகனங்களுக்கான மோட்டார் பரிசோதகரின் அறிக்கை
உரிய வாகனத்தின் முன்பகுதி மற்றும் உடற்பகுதியினை காட்டும் தபால் அட்டை அளவிலான கலர் புகைப்படங்கள் (அடிச்சட்டக இலக்கம் குறிப்பிடப்படுவதுடன் விண்ணப்பதாரி ஒப்பமிடுதல் வேண்டும்)
மோட்டார் சைக்கிள்களாயின் மோட்டார் வாகனப் பரிசோதகரால் சான்றுப்படுத்தப்பட்ட உள்ளடக்க பட்டியல்
இறக்குமதி செய்யப்பட்ட மறுசீரமைக்கப்பட்ட மோட்டார் சைக்கிள் எனின் சுங்க ஆவணங்களுக்குமேலதிகமாக இயந்திரம் மற்றும் அடிச்சட்டக இலக்கங்கள் மோட்டார் வாகனப் பரிசோதகரால் சான்றுப்படுத்தப்பட வேண்டும்.
இந்த நாட்டிலே உற்பத்தி செய்யப்பட்ட அல்லது பொருத்தப்பட்ட மோட்டார் வாகனம் ஆயின் இயந்திர இலக்கம், அடிச்சட்டக இலக்கம் என்பவற்றை அங்கீகரிக்கும் உதவி ஆணையாளரின் கடிதமும் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
தீர்வையற்ற சலுகையுடன் இறக்குமதி செய்யப்படும் பட்சத்தில் தீர்வையற்றமைக்கான அனுமதிப்பத்திரங்கள்.